மெக்சிகோ நாட்டின் இண்டர்ஓஷெனிக் ரயில் நிசாண்டா நகரத்தின் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்ததுடன் 98 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்தபோது ரயிலில் 241 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து, பசிபிக் பெருங்கடலை மெக்சிகோ வளைகுடாவுடன் இணைக்கும் ரயில் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்து; 13 பேர் பலி 98 பேர் படுகாயம் மெக்சிகோ நாட்டின் இண்டர்ஓஷெனிக் ரயில் நிசாண்டா நகரத்தின் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்ததுடன் 98 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.விபத்து நடந்தபோது ரயிலில் 241 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விபத்தைத் தொடர்ந்து, பசிபிக் பெருங்கடலை மெக்சிகோ வளைகுடாவுடன் இணைக்கும் ரயில் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.