தாயாரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி புதிய தொலைபேசி சிம் அட்டை ஒன்றைப் பெற்றுத் தருமாறு கோரி ஏற்பட்ட குடும்பத் தகராறு, 24 வயதுடைய இளைஞர் ஒருவரின் உயிரைப் பறித்த சோகச் சம்பவம் சுன்னாகப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுன்னாகத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், தனது தாயாரிடம் சிம் அட்டை எடுத்துத் தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு தாயார் சம்மதிக்காததால் இருவருக்குமிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த இளைஞன், வீட்டை விட்டு வெளியேறித் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அருகில் உள்ள வயல் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கே தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட அவர், வலியின் தாக்கம் தாளாமல் அக் கணத்திலேயே அருகிலிருந்த வயல் கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் இளைஞனின் சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
சிம் அட்டை கோரி தாயாருடன் வீண் தகராறு-பறிபோன 24 வயது இளைஞனின் உயிர் தாயாரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி புதிய தொலைபேசி சிம் அட்டை ஒன்றைப் பெற்றுத் தருமாறு கோரி ஏற்பட்ட குடும்பத் தகராறு, 24 வயதுடைய இளைஞர் ஒருவரின் உயிரைப் பறித்த சோகச் சம்பவம் சுன்னாகப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.சுன்னாகத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், தனது தாயாரிடம் சிம் அட்டை எடுத்துத் தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு தாயார் சம்மதிக்காததால் இருவருக்குமிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த இளைஞன், வீட்டை விட்டு வெளியேறித் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அருகில் உள்ள வயல் பகுதிக்குச் சென்றுள்ளார்.அங்கே தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட அவர், வலியின் தாக்கம் தாளாமல் அக் கணத்திலேயே அருகிலிருந்த வயல் கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் இளைஞனின் சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.