• Jun 05 2026

திரையுலகில் தொடரும் சோகம்...! பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்...!samugammedia

Ziya / Feb 7th 2024, 12:48 pm
image

தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, 'காவலன் அவன் கோவலன்', 'ராசாத்தி வரும் நாள்', 'கயிறு' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆனந்த். 

இவர் உடல்நலக் குறைவால் சென்னையில் தனது 71 ஆவது வயதில்  நேற்றையதினம்(06) காலமானார்.

’ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்' போன்ற பல ஹிட் பாடல்களை எண்பதுகளில் இசையமைத்துள்ளார். 

விசு இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர்.

அவர் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



திரையுலகில் தொடரும் சோகம். பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்.samugammedia தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, 'காவலன் அவன் கோவலன்', 'ராசாத்தி வரும் நாள்', 'கயிறு' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆனந்த். இவர் உடல்நலக் குறைவால் சென்னையில் தனது 71 ஆவது வயதில்  நேற்றையதினம்(06) காலமானார்.’ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்' போன்ற பல ஹிட் பாடல்களை எண்பதுகளில் இசையமைத்துள்ளார். விசு இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர்.அவர் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement