நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி , நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் இன்றும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.
இந்த மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது 'கவனம் செலுத்த வேண்டிய' மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இன்றும் கடும் வெப்பமான வானிலை - பிற்பகலில் இடியுடன் மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கண்டி , நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் இன்றும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.இந்த மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது 'கவனம் செலுத்த வேண்டிய' மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.