லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் கல்கமுவ - குருந்தன்குளம் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்தவிபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் மற்றும் அதன் பின்னால் இருந்த மூன்று பயணிகள் மற்றும் லொறி சாரதிக்குப் பின்னால் இருந்த ஐந்து பயணிகள் காயமடைந்த நிலையில், கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பின்னால் இருந்த பெண் ஒருவர் இதன்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காயமடைந்த ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரகள் 58 மற்றும் 29 வயதுடைய தாய் மற்றும் மகன் என தெரியவந்துள்ளது.
சடலங்கள் கல்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லொறியுடன் மோதிய முச்சக்கரவண்டி; இருவர் உயிரிழப்பு லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் கல்கமுவ - குருந்தன்குளம் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.அநுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்தவிபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் மற்றும் அதன் பின்னால் இருந்த மூன்று பயணிகள் மற்றும் லொறி சாரதிக்குப் பின்னால் இருந்த ஐந்து பயணிகள் காயமடைந்த நிலையில், கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பின்னால் இருந்த பெண் ஒருவர் இதன்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்தவரகள் 58 மற்றும் 29 வயதுடைய தாய் மற்றும் மகன் என தெரியவந்துள்ளது.சடலங்கள் கல்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.