• Apr 15 2026

நீரில் அடித்துச் செல்லப்பட்டமூன்று சகோதரர்கள் - ஒருவர் சடலமாக மீட்பு! திருமலையில் துயரம்

Chithra / Apr 15th 2026, 11:06 am
image

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி,  சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.


இவர்களில் 35 வயதுடைய லக்சான் பேரரேரா  என்பவர் மாத்திரமே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


24, 34  வயதுடைய மற்றைய இளைஞர்களின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.


அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப்பணி பணி முன்னெடுக்கப்பட்டபோது அதில் ஒருவரின் சடலம் மாத்திரம்  மீட்கப்பட்டுள்ளது.


மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  


புத்தாண்டு தினத்தன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


நீரில் அடித்துச் செல்லப்பட்டமூன்று சகோதரர்கள் - ஒருவர் சடலமாக மீட்பு திருமலையில் துயரம் திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி,  சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.இவர்களில் 35 வயதுடைய லக்சான் பேரரேரா  என்பவர் மாத்திரமே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.24, 34  வயதுடைய மற்றைய இளைஞர்களின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லைசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப்பணி பணி முன்னெடுக்கப்பட்டபோது அதில் ஒருவரின் சடலம் மாத்திரம்  மீட்கப்பட்டுள்ளது.மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  புத்தாண்டு தினத்தன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement