• Jul 17 2026

தீவிரமாகும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 8 மாதங்களில் 230,000க்கும் அதிகமானோர் கைது!

Chithra / Jul 16th 2026, 7:44 pm
image


"நாடு முழுவதும் ஒன்றிணைந்த தேசிய நடவடிக்கை" திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகள் சம்பந்தமான விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று இன்று (16) கொழும்பிலுள்ள  திட்டத்தின் பிரதான காரியாலயம் மற்றும் ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.


பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா ஆகியோரின் பங்கேற்புடன் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.


இங்கு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கூட்டு நடவடிக்கையாக இந்த போதைப்பொருள் சோதனைகள் மிகவும் திறம்பட நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.


அதன்படி, கடந்த 08 மாத காலப்பகுதியில் மாத்திரம் போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடைய 230,248 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


அத்துடன், இந்தச் சோதனைகளின் போது எந்தவொரு நிரபராதியும் அநியாயமாகக் கைது செய்யப்படக் கூடாது என்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியாக இருப்பதாகவும், அதற்கான தெளிவான அறிவுறுத்தல்கள் உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் வலியுறுத்தினார்.


இதனைத் தொடர்ந்து உரையாற்றிய இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா, கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் விமான நிலையம் மற்றும் தபால் மூலமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 13 போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளதாக தெரிவித்தார்.


மிகச் சிறிய அளவிலான போதைப்பொருட்கள் தபால் மூலம் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டாலும், அது சமூகத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அத்தகைய கடத்தல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

தீவிரமாகும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 8 மாதங்களில் 230,000க்கும் அதிகமானோர் கைது "நாடு முழுவதும் ஒன்றிணைந்த தேசிய நடவடிக்கை" திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகள் சம்பந்தமான விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று இன்று (16) கொழும்பிலுள்ள  திட்டத்தின் பிரதான காரியாலயம் மற்றும் ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா ஆகியோரின் பங்கேற்புடன் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கூட்டு நடவடிக்கையாக இந்த போதைப்பொருள் சோதனைகள் மிகவும் திறம்பட நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.அதன்படி, கடந்த 08 மாத காலப்பகுதியில் மாத்திரம் போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடைய 230,248 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அத்துடன், இந்தச் சோதனைகளின் போது எந்தவொரு நிரபராதியும் அநியாயமாகக் கைது செய்யப்படக் கூடாது என்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியாக இருப்பதாகவும், அதற்கான தெளிவான அறிவுறுத்தல்கள் உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து உரையாற்றிய இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா, கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் விமான நிலையம் மற்றும் தபால் மூலமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 13 போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளதாக தெரிவித்தார்.மிகச் சிறிய அளவிலான போதைப்பொருட்கள் தபால் மூலம் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டாலும், அது சமூகத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அத்தகைய கடத்தல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement