மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீர் வழங்கும் இரண்டு பிரதான நீர் தேக்கங்களான மவுஸ்சாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
தற்போது இப் பகுதியில் மழை பெய்து வந்தபோதும், கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான கலுகல ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள், நீர் மின் உற்பத்தி செய்வதால் நாளாந்தம் மவுஸ்சாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீரையே பயன்படுத்தி வருவதால் தற்போது இந்த இரண்டு நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம், அதன் கொள்ளளவை விட 19 அடி குறைந்துள்ளது.
அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்துள்ளது.
கென்யோன்,லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர, ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் வெகுவாக குறைந்த நீர் தேக்கங்களின் நீர் மட்டம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீர் வழங்கும் இரண்டு பிரதான நீர் தேக்கங்களான மவுஸ்சாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.தற்போது இப் பகுதியில் மழை பெய்து வந்தபோதும், கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான கலுகல ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள், நீர் மின் உற்பத்தி செய்வதால் நாளாந்தம் மவுஸ்சாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீரையே பயன்படுத்தி வருவதால் தற்போது இந்த இரண்டு நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம், அதன் கொள்ளளவை விட 19 அடி குறைந்துள்ளது.அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்துள்ளது.கென்யோன்,லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர, ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.