• Sep 30 2026

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு ஓர் இன்றியமையாத பங்காளியாகும்,! விஜித ஹேரத் தெரிவிப்பு

Aathira / Sep 29th 2026, 11:30 am
image

உலகில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பதிலளிக்கக்கூடிய ஓர் அமைப்பாக மாற்றுவதற்கு, அதில் மேற்கொள்ளப்படும் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை இலங்கை ஆதரிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது அமர்வில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றும்போது, ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு ஓர்  இன்றியமையாத பங்காளியாகும் என்றும் விவரித்தார்.

சமகால உலகளாவிய யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், புதிதாக உருவாகும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் அதன் நிறுவனங்கள் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்வதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு ஓர் இன்றியமையாத பங்காளியாகும், விஜித ஹேரத் தெரிவிப்பு உலகில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பதிலளிக்கக்கூடிய ஓர் அமைப்பாக மாற்றுவதற்கு, அதில் மேற்கொள்ளப்படும் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை இலங்கை ஆதரிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது அமர்வில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் உரையாற்றும்போது, ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு ஓர்  இன்றியமையாத பங்காளியாகும் என்றும் விவரித்தார்.சமகால உலகளாவிய யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், புதிதாக உருவாகும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் அதன் நிறுவனங்கள் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்வதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement