தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK733, பாதுகாப்பாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது
202 பயணிகளுடன் கொழும்பிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட குறித்த விமானத்தில், பயணத்தின் போது திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு அவதானிக்கப்பட்டது.
அதாவது, பயணத்தை தொடங்கிய சிறு பொழுதுகளிலேயே, விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்கும் அமைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்துள்ளார்.
அதன் பின்னர், விமானத்தைத் தொடர்ந்து இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த விமானி, உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரியுள்ளார்.
இருப்பினும், முழுப் பயணத்திற்கும் தேவையான எரிபொருளுடன் இருந்த விமானம், அதன் அதிகப்படியான எடையுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உடனடியாகத் தரையிறக்க முடியாமல் போயுள்ளது.
அதனை தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானத்தை வட்ட பாதையில் செயற்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எடையைக் குறைத்துக்கொண்ட அந்த விமானம் நள்ளிரவில் மிகவும் லாவகமாகப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வான்பரப்பில் நீண்ட நேரமாக வட்டமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விமானம்; 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம் தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK733, பாதுகாப்பாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது202 பயணிகளுடன் கொழும்பிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட குறித்த விமானத்தில், பயணத்தின் போது திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு அவதானிக்கப்பட்டது. அதாவது, பயணத்தை தொடங்கிய சிறு பொழுதுகளிலேயே, விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்கும் அமைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்துள்ளார். அதன் பின்னர், விமானத்தைத் தொடர்ந்து இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த விமானி, உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரியுள்ளார். இருப்பினும், முழுப் பயணத்திற்கும் தேவையான எரிபொருளுடன் இருந்த விமானம், அதன் அதிகப்படியான எடையுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உடனடியாகத் தரையிறக்க முடியாமல் போயுள்ளது. அதனை தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானத்தை வட்ட பாதையில் செயற்படுத்தியுள்ளார்.தொடர்ந்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எடையைக் குறைத்துக்கொண்ட அந்த விமானம் நள்ளிரவில் மிகவும் லாவகமாகப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.