• May 20 2026

முப்படை வீரர்களுக்கு ரோஸூடன் அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சி!

shanu / May 20th 2026, 4:50 pm
image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் ரோஜாப்பூக்களுடன் சென்று முப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


பத்தரமுல்லை பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைந்துள்ள படைவீரர் நினைவுத் தூபியில் படை வீரர்கள் நினைவு  இன்று (20) முன்னெடுக்கப்பட்டது. 


இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கையில் ரோஜாப்பூக்கள், மலர்க்கொத்துக்களுடன் சென்று மலரஞ்சலி செலுத்தினர். 


அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச,  

30 ஆண்டுகால கொடூர பயங்கரவாத யுத்தத்தின் சாபத்திலிருந்து நாட்டை  மீட்டெடுத்த நமது கௌரவத்துக்கு பாத்திரமான முப்படை வீரர்களுக்கு எனது நன்றி கலந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்து, உடல் பாகங்களைத் தியாகம் செய்து, இரத்தம் சிந்தி நாட்டிற்காக நிறைவேற்றிய கடமையை நாம் மதிக்கிறோம். 


மீண்டும் இத்தகைய யுத்தமொன்று உருவாகாத வகையில், பயங்கரவாத சூழலொன்று உருவாகாத வகையில் நாட்டில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் நல்லிணக்க முன்னெடுப்புகளும் நடைபெற வேண்டும். 


ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடுகளைப் பேணிக் காத்து நாட்டை சௌபாக்கியம் நோக்கி அழைத்துச் செல்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.  


இதன் பொருட்டு முப்படை வீரர்கள் நிறைவேற்றிய மகத்தான பணிக்கு என்றும் நாம் எமது மரியாதையைத் செலுத்துகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். 


இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரும் முப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதிலும் மஹிந்த ராஜபக்ச தள்ளாடி தள்ளாடி அஞ்சலி செலுத்திய போது அவரை மகன் நாமலும் மனைவி ஷிரந்தி ராஜபக்சவும் தாங்கிப்பிடித்தவாறு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முப்படை வீரர்களுக்கு ரோஸூடன் அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் ரோஜாப்பூக்களுடன் சென்று முப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.பத்தரமுல்லை பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைந்துள்ள படைவீரர் நினைவுத் தூபியில் படை வீரர்கள் நினைவு  இன்று (20) முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கையில் ரோஜாப்பூக்கள், மலர்க்கொத்துக்களுடன் சென்று மலரஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச,  30 ஆண்டுகால கொடூர பயங்கரவாத யுத்தத்தின் சாபத்திலிருந்து நாட்டை  மீட்டெடுத்த நமது கௌரவத்துக்கு பாத்திரமான முப்படை வீரர்களுக்கு எனது நன்றி கலந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்து, உடல் பாகங்களைத் தியாகம் செய்து, இரத்தம் சிந்தி நாட்டிற்காக நிறைவேற்றிய கடமையை நாம் மதிக்கிறோம். மீண்டும் இத்தகைய யுத்தமொன்று உருவாகாத வகையில், பயங்கரவாத சூழலொன்று உருவாகாத வகையில் நாட்டில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் நல்லிணக்க முன்னெடுப்புகளும் நடைபெற வேண்டும். ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடுகளைப் பேணிக் காத்து நாட்டை சௌபாக்கியம் நோக்கி அழைத்துச் செல்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.  இதன் பொருட்டு முப்படை வீரர்கள் நிறைவேற்றிய மகத்தான பணிக்கு என்றும் நாம் எமது மரியாதையைத் செலுத்துகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரும் முப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதிலும் மஹிந்த ராஜபக்ச தள்ளாடி தள்ளாடி அஞ்சலி செலுத்திய போது அவரை மகன் நாமலும் மனைவி ஷிரந்தி ராஜபக்சவும் தாங்கிப்பிடித்தவாறு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement