கொக்குவில் இந்து முன்பள்ளியில் சிறுவர் சந்தை முன்பள்ளி வளாகத்தில் நேற்று புதன்கிழமை காலை மிக சிறப்பாக நடத்தப்பட்டது.
சிறுவர்களுக்கு வியாபாரம் தொடர்பான அறிவினை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு நடைபெற்ற சந்தை நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபர் கே.சிறிநந்தகோபன் பங்கேற்றார்.
இதன்போது முன்பள்ளி சிறுவர்கள் சந்தை வியாபாரிகள் போல வேடமிட்டு உற்பத்திப் பொருட்களை மாதிரி சந்தையை அமைத்து வியாபார நடவடிக்கைகளை முனெடுத்தனர்.
மரக்கறிகள், உணவுப்பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல உற்பத்திகளை காட்சிப்படுத்தி சிறுவர்கள் விற்பனையில் ஆர்வமாக ஈடுபட்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் கொக்குவில் இந்து முன்பள்ளி அதிபர் அசோகா, முன்பள்ளி ஆசிரியர்கள், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிரம்மிக்க வைத்த கொக்குவில் இந்து முன்பள்ளி சிறுவர் சந்தை கொக்குவில் இந்து முன்பள்ளியில் சிறுவர் சந்தை முன்பள்ளி வளாகத்தில் நேற்று புதன்கிழமை காலை மிக சிறப்பாக நடத்தப்பட்டது.சிறுவர்களுக்கு வியாபாரம் தொடர்பான அறிவினை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு நடைபெற்ற சந்தை நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபர் கே.சிறிநந்தகோபன் பங்கேற்றார்.இதன்போது முன்பள்ளி சிறுவர்கள் சந்தை வியாபாரிகள் போல வேடமிட்டு உற்பத்திப் பொருட்களை மாதிரி சந்தையை அமைத்து வியாபார நடவடிக்கைகளை முனெடுத்தனர். மரக்கறிகள், உணவுப்பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல உற்பத்திகளை காட்சிப்படுத்தி சிறுவர்கள் விற்பனையில் ஆர்வமாக ஈடுபட்டிருந்தனர்.குறித்த நிகழ்வில் கொக்குவில் இந்து முன்பள்ளி அதிபர் அசோகா, முன்பள்ளி ஆசிரியர்கள், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.