• Apr 27 2026

அரசு தனது சொந்தக் குழியைத் தானே தோண்டுகிறது; நாமல் எடுத்த அடுத்தகட்ட அதிரடி முடிவு

Chithra / Jan 7th 2026, 6:49 pm
image


எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை அரசாங்கம் செவிமடுப்பதில்லை. அரசாங்கம் முறையான திட்டமிடல்கள் இன்றிச் செயற்படுவதன் மூலம் தனது சொந்தக் குழியைத் தானே தோண்டிக் கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எச்சரித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் தனது கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து, பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடந்த நிகழ்வொனறின் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய  கருத்துக்களில்,

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத் தயாரிப்பில் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் மற்றும் முறையான பொருளாதாரத் தூண்டுகோல்கள் இன்றி நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என அவர் வலியுறுத்தினார். 

தேர்தல்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் தற்காலிகக் கூட்டணிகள் நிலையற்றவை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஒரு பலமான அரசியல் சக்தியாக மறுசீரமைப்பதே தமது பிரதான நோக்கம்.

கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, புதிய உத்வேகத்துடன் கட்சியை வழிநடத்தப் போவதாக அவர் கூறினார்.

நாட்டை நவீனமயமாக்குவது குறித்துப் பேசிய அவர், 

கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் அதேவேளை, ஆசியாவின் நவீன பொருளாதார மையமாக இலங்கையை மாற்றுவதே தமது இலக்கு. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியான பிணைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் அன்னிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

ஊடக சுதந்திரம் என்பது பொய்களைப் பரப்புவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது, அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. 

மக்களின் தேவைகளை உணர்ந்து, ஒரு வலுவான எதிர்க்கட்சியாக நின்று அரசாங்கத்தின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டப்போவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

அரசு தனது சொந்தக் குழியைத் தானே தோண்டுகிறது; நாமல் எடுத்த அடுத்தகட்ட அதிரடி முடிவு எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை அரசாங்கம் செவிமடுப்பதில்லை. அரசாங்கம் முறையான திட்டமிடல்கள் இன்றிச் செயற்படுவதன் மூலம் தனது சொந்தக் குழியைத் தானே தோண்டிக் கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எச்சரித்தார்.தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் தனது கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து, பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடந்த நிகழ்வொனறின் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய  கருத்துக்களில்,2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத் தயாரிப்பில் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் மற்றும் முறையான பொருளாதாரத் தூண்டுகோல்கள் இன்றி நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என அவர் வலியுறுத்தினார். தேர்தல்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் தற்காலிகக் கூட்டணிகள் நிலையற்றவை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஒரு பலமான அரசியல் சக்தியாக மறுசீரமைப்பதே தமது பிரதான நோக்கம்.கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, புதிய உத்வேகத்துடன் கட்சியை வழிநடத்தப் போவதாக அவர் கூறினார்.நாட்டை நவீனமயமாக்குவது குறித்துப் பேசிய அவர், கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் அதேவேளை, ஆசியாவின் நவீன பொருளாதார மையமாக இலங்கையை மாற்றுவதே தமது இலக்கு. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியான பிணைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் அன்னிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஊடக சுதந்திரம் என்பது பொய்களைப் பரப்புவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது, அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. மக்களின் தேவைகளை உணர்ந்து, ஒரு வலுவான எதிர்க்கட்சியாக நின்று அரசாங்கத்தின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டப்போவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement