• Apr 23 2026

தரம் 06 பாடப்புத்தக விவகாரத்தில் அரசு பொறுப்பற்ற முறையில் செயற்படுகிறது: சஞ்சீவ எதிரிமான்ன சாடல்

Chithra / Jan 7th 2026, 7:52 pm
image

 

தரம் 06 மாணவர்களுக்கான ஆங்கிலப் பயிற்சி நூலில் ஏற்பட்டுள்ள பாரிய குளறுபடிகள் குறித்து சமூகம் கேள்வி எழுப்பியுள்ள போதிலும், அரசாங்கம் அது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி தீர்வை வழங்க முன்வரவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (2026.01.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பாடநூல்களில் ஒரு எழுத்துப்பிழை அல்லது ஒரு குறியீடு மாறினால் கூட, அதனை ஒரு பாரதூரமான பிரச்சினையாகவும் உணர்வுபூர்வமான விடயமாகவும் கருதிய சமூகமாக நாம் இருந்துள்ளோம்.

பிள்ளைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடைய இத்தகைய கல்வி மூலங்களில் அச்சுப்பிழைகள் மாத்திரமல்ல, ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றாலும் அது ஒரு பிரச்சினையல்ல என்ற நிலைக்கு இந்த அரசாங்கம் சமூகத்தைத் தள்ள முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

தரம் 06 ஆங்கிலப் பயிற்சி நூலில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை அரசாங்கம் ஒரு பெரிய விடயமாகக் கருதியதாகத் தெரியவில்லை என்றும், செய்த தவறை விடவும் அந்தத் தவறுக்கான பொறுப்பை ஏற்க மறுப்பது மிகவும் மோசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், சமூகத்தில் அவர்கள் உருவாக்கியுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் எதற்கும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவித்த அவர், விசாரணைகள் நடைபெறுகின்றன அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்கள் இத்தகைய தவறுகளை செய்யமாட்டார்கள் என்ற வாதங்களை முன்வைத்தே அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிப்பதாகக் கூறினார்.

துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சமூகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியும், அது குறித்து இன்றுவரை முறையான விசாரணைத் தகவல்கள் எதனையும் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், கொத்மலை அணைக்கட்டு திறக்கப்பட்ட விதம் குறித்தும் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்ப ரீதியான கேள்விகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படவில்லை என்றார்.

ஆங்கிலப் பயிற்சி நூல் விவகாரத்திலும் சமூகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அரசாங்கம் மௌனம் காப்பதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்திற்கு வரும் ஜனாதிபதி, தமது தரப்பினர் இவ்வாறான தவறுகளைச் செய்வார்கள் என நினைக்கிறீர்களா எனக் கேட்டுச் சிரித்துவிட்டுச் செல்வதன் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது என வலியுறுத்தினார். 

தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி உள்ளிட்ட 159 பேரும் சட்டத்திற்கு மேலானவர்களாகச் செயற்படுவதாகவும், மக்கள் அபிலாஷைகளிலிருந்து இந்த அரசாங்கம் வெகுதூரம் விலகிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் தேர்தலொன்றின் போதே அரசாங்கம் இதன் உண்மையான விளைவை அனுபவிக்கும் எனத் தெரிவித்தார்.

தரம் 06 பாடப்புத்தக விவகாரத்தில் அரசு பொறுப்பற்ற முறையில் செயற்படுகிறது: சஞ்சீவ எதிரிமான்ன சாடல்  தரம் 06 மாணவர்களுக்கான ஆங்கிலப் பயிற்சி நூலில் ஏற்பட்டுள்ள பாரிய குளறுபடிகள் குறித்து சமூகம் கேள்வி எழுப்பியுள்ள போதிலும், அரசாங்கம் அது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி தீர்வை வழங்க முன்வரவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (2026.01.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பாடநூல்களில் ஒரு எழுத்துப்பிழை அல்லது ஒரு குறியீடு மாறினால் கூட, அதனை ஒரு பாரதூரமான பிரச்சினையாகவும் உணர்வுபூர்வமான விடயமாகவும் கருதிய சமூகமாக நாம் இருந்துள்ளோம்.பிள்ளைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடைய இத்தகைய கல்வி மூலங்களில் அச்சுப்பிழைகள் மாத்திரமல்ல, ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றாலும் அது ஒரு பிரச்சினையல்ல என்ற நிலைக்கு இந்த அரசாங்கம் சமூகத்தைத் தள்ள முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.தரம் 06 ஆங்கிலப் பயிற்சி நூலில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை அரசாங்கம் ஒரு பெரிய விடயமாகக் கருதியதாகத் தெரியவில்லை என்றும், செய்த தவறை விடவும் அந்தத் தவறுக்கான பொறுப்பை ஏற்க மறுப்பது மிகவும் மோசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், சமூகத்தில் அவர்கள் உருவாக்கியுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் எதற்கும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவித்த அவர், விசாரணைகள் நடைபெறுகின்றன அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்கள் இத்தகைய தவறுகளை செய்யமாட்டார்கள் என்ற வாதங்களை முன்வைத்தே அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிப்பதாகக் கூறினார்.துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சமூகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியும், அது குறித்து இன்றுவரை முறையான விசாரணைத் தகவல்கள் எதனையும் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், கொத்மலை அணைக்கட்டு திறக்கப்பட்ட விதம் குறித்தும் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்ப ரீதியான கேள்விகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படவில்லை என்றார்.ஆங்கிலப் பயிற்சி நூல் விவகாரத்திலும் சமூகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அரசாங்கம் மௌனம் காப்பதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்திற்கு வரும் ஜனாதிபதி, தமது தரப்பினர் இவ்வாறான தவறுகளைச் செய்வார்கள் என நினைக்கிறீர்களா எனக் கேட்டுச் சிரித்துவிட்டுச் செல்வதன் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது என வலியுறுத்தினார். தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி உள்ளிட்ட 159 பேரும் சட்டத்திற்கு மேலானவர்களாகச் செயற்படுவதாகவும், மக்கள் அபிலாஷைகளிலிருந்து இந்த அரசாங்கம் வெகுதூரம் விலகிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் தேர்தலொன்றின் போதே அரசாங்கம் இதன் உண்மையான விளைவை அனுபவிக்கும் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement