• Jul 14 2026

கடலில் மிதந்து வந்த மீனவரின் சடலம்! யாழில் பரபரப்பு

Chithra / Jul 9th 2026, 4:41 pm
image


யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடற்பரப்பில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உயிரிழந்தவர் அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 49 வயதுடைய செல்லையா சிவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


பொலிஸார் தெரிவித்ததன்படி, அவர் இன்று காலை வழக்கம்போல் கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்றிருந்தார். 


பின்னர் இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில், கடலில் அவரது சடலம் மிதந்து கொண்டிருப்பதை அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மற்ற மீனவர்கள் அவதானித்துள்ளனர்.


இதையடுத்து, சம்பவம் தொடர்பில் உறவினர்களுக்கும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. 


தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


சடலம் தொடர்பான திடீர் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடலில் மிதந்து வந்த மீனவரின் சடலம் யாழில் பரபரப்பு யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடற்பரப்பில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர் அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 49 வயதுடைய செல்லையா சிவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொலிஸார் தெரிவித்ததன்படி, அவர் இன்று காலை வழக்கம்போல் கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்றிருந்தார். பின்னர் இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில், கடலில் அவரது சடலம் மிதந்து கொண்டிருப்பதை அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மற்ற மீனவர்கள் அவதானித்துள்ளனர்.இதையடுத்து, சம்பவம் தொடர்பில் உறவினர்களுக்கும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.சடலம் தொடர்பான திடீர் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement