• Jul 08 2026

அமெரிக்க தளத்தை தாக்கியதாக ஈரான் -வளைகுடாவில் மீண்டும் போர் பதற்றம்!

Ziya / Jul 8th 2026, 3:09 pm
image

பஹ்ரைனில் அமைந்துள்ள ஷேக் ஈசா விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு ஆளில்லா விமான  தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. 


தெற்கு ஈரானில் நடைபெற்றதாகக் கூறப்படும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.


ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா விமானப்படைத் தளத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


மேலும், "அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறினால், அப்பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவத் தளங்களும் எங்கள் ட்ரோன் தாக்குதல்களின் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும்" என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.


இந்த அறிவிப்பு வெளியாகும் சில நிமிடங்களுக்கு முன்பு, பஹ்ரைனில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிப்பான்கள் இரண்டாவது முறையாக இயக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.


அமெரிக்க தளத்தை தாக்கியதாக ஈரான் -வளைகுடாவில் மீண்டும் போர் பதற்றம் பஹ்ரைனில் அமைந்துள்ள ஷேக் ஈசா விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு ஆளில்லா விமான  தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. தெற்கு ஈரானில் நடைபெற்றதாகக் கூறப்படும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா விமானப்படைத் தளத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.மேலும், "அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறினால், அப்பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவத் தளங்களும் எங்கள் ட்ரோன் தாக்குதல்களின் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும்" என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.இந்த அறிவிப்பு வெளியாகும் சில நிமிடங்களுக்கு முன்பு, பஹ்ரைனில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிப்பான்கள் இரண்டாவது முறையாக இயக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement