• May 31 2026

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி தேவை இல்லை நீதியே தேவை - வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

shanu / May 30th 2026, 5:52 pm
image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி தேவை இல்லை நீதியே தேவை, சர்வதேச தலையீடு தேவை எனவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தனர்.


50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  காணாமல் போன தமது உறவினர்களுடைய படங்களை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.


அத்துடன் ஓ.எம். பி அலுவலகத்தினால் வழங்கப்பட்டுவதாக கூறப்படும் நிதி தேவை இல்லை எனவும் சர்வதேச ரீதியிலான விசாரணையும் தமது காணாமல் போன உறவினர்களுடைய முடிவுமே தமக்குத் தேவையான ஒன்று எனவும் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.


பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பிக்கொண்டு சுமார் ஒரு மணி நேரமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி தேவை இல்லை நீதியே தேவை - வவுனியாவில் ஆர்ப்பாட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி தேவை இல்லை நீதியே தேவை, சர்வதேச தலையீடு தேவை எனவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தனர்.50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  காணாமல் போன தமது உறவினர்களுடைய படங்களை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.அத்துடன் ஓ.எம். பி அலுவலகத்தினால் வழங்கப்பட்டுவதாக கூறப்படும் நிதி தேவை இல்லை எனவும் சர்வதேச ரீதியிலான விசாரணையும் தமது காணாமல் போன உறவினர்களுடைய முடிவுமே தமக்குத் தேவையான ஒன்று எனவும் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பிக்கொண்டு சுமார் ஒரு மணி நேரமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement