• Apr 29 2026

போதைக்கு பணம் தராத தாயின் கால்களை உடைத்த கொடூர மகன்

Chithra / Apr 29th 2026, 12:43 pm
image

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தராததால் பெற்ற தாயின் கால்களைத் தடியால் அடித்து உடைத்த மகனின் செயல் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேகாலை - தேவலகம பகுதியில் கடந்த 26ஆம் திகதி இக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது தாயிடம்   5,000 ரூபா கேட்டுள்ளார். 


தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தாய் கூறியதால் ஆத்திரமடைந்த  இளைஞன், அருகில் கிடந்த தடியால் தாயின் இரு கால்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 46 வயதான அந்தப் பெண்ணின் இரு கால்களும் முறிந்துள்ளன. 


வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு,  கேகாலை பொது வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளனர். அவரது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது  அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


பெற்ற தாய் என்றும் பாராமல் இந்த மிலேச்சத்தனமான செயலைச் செய்த அந்த இளைஞன், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். 


இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைப் பிடிக்க தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதற்கு முன்னரும் அந்த இளைஞன், நண்பர்களுடன் போதைப்பொருள் நுகர்வதற்காக தன் தாயிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மகனின் அச்சுறுத்தல் காரணமாக சில சமயங்களில் தாய் பணம் கொடுத்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இளம் தலைமுறையினரிடையே வேகமாகப் பரவி வரும் போதைப்பொருள் பழக்கம், உறவுகளையும் மனிதாபிமானத்தையும் எவ்வாறெல்லாம் சிதைக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான சான்றாக அமைந்துள்ளது.


போதைக்கு பணம் தராத தாயின் கால்களை உடைத்த கொடூர மகன் போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தராததால் பெற்ற தாயின் கால்களைத் தடியால் அடித்து உடைத்த மகனின் செயல் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேகாலை - தேவலகம பகுதியில் கடந்த 26ஆம் திகதி இக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது தாயிடம்   5,000 ரூபா கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தாய் கூறியதால் ஆத்திரமடைந்த  இளைஞன், அருகில் கிடந்த தடியால் தாயின் இரு கால்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 46 வயதான அந்தப் பெண்ணின் இரு கால்களும் முறிந்துள்ளன. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு,  கேகாலை பொது வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளனர். அவரது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது  அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.பெற்ற தாய் என்றும் பாராமல் இந்த மிலேச்சத்தனமான செயலைச் செய்த அந்த இளைஞன், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைப் பிடிக்க தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதற்கு முன்னரும் அந்த இளைஞன், நண்பர்களுடன் போதைப்பொருள் நுகர்வதற்காக தன் தாயிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மகனின் அச்சுறுத்தல் காரணமாக சில சமயங்களில் தாய் பணம் கொடுத்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இளம் தலைமுறையினரிடையே வேகமாகப் பரவி வரும் போதைப்பொருள் பழக்கம், உறவுகளையும் மனிதாபிமானத்தையும் எவ்வாறெல்லாம் சிதைக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான சான்றாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement