ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 5 ஆவது சபையின் 6 ஆவது சபை அமர்வானது இன்று(26) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது தவிசாளரினால் மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் நினைவு கூறப்பட்டதுடன் அவர் நிந்தவூர் சபைக்கு ஊடகவியலாளராக இருந்து பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியதாக சுட்டிக்காட்டி அனுதாப பிரேரணை ஒன்றினை சபையில் சமர்ப்பித்திருந்தார்.
இதற்கமைய சபையில் ஏகமனதாக குறித்த பிரேரணை நிறைவேற்றம் செய்யப்பட்டு பின்னர் மறைந்த ஊடகவியலாளருக்கு சபையில் ஒரு நிமிட மௌன பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அங்கிள் என்றே அவரை நான் அழைப்பேன். சமூகத்தில் மதிப்புமிக்க மூத்த குடிமகனாக விளங்கியதுடன் தனது 77 ஆவது வயதில் சுகயீனமுற்றிருந்த நிலையில் அண்மையில் தனது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது.அவர் நீண்ட ஆயுளில் மதிப்பும் மரியாதையும் நிறைந்து வாழ்க்கையை வாழ்ந்ததுடன் சமூக நலனில் ஆர்வம் உள்ளவராகவும் அனைவராலும் மதிக்கப்படுவதாகவும் இருந்தார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கென ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு மக்களின் மனதில் நீங்காத இடத்தினைப் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
இது தவிர எமது நிந்தவூர் பிரதேச சபை அபிவிருத்தியிலும் நிறைந்த ஒத்துழைப்பினை நல்கி அனைவரது பாராட்டையும் பெற்ற நடுநிலையான ஊடகவியலாளர் இவராவார்.
கலாபூஷணம் ஏ. எல்.எம். சலீம், ஊடகத் துறையில் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னணி மூத்த ஊடகவியலாளராக திகழ்ந்தவர்.
மற்றும் கிழக்கிலங்கை மட்டங்களில் பல ஊடக அமைப்புகளை உருவாக்கி வளர்த்ததில் அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது.அவரது பணிவும் நேர்மையும் எமது சபை தவிசாளர் உட்பட உறுப்பினர்களை வழிநடத்திய அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை நிந்தவூர் பிரதேச சபை சார்பாகத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இந்த துயர வேளையில் மன அமைதி பொறுமை கிடைக்க பிராத்திக்கின்றேன் இவரின் நினைவு என்றும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும் என சபையில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் தலைமையில் ஏனைய உறுப்பினர்கள் பங்கபற்றலுடன் ஆரம்பமாகின.
இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் உரையுடன் தொடர்ச்சியாக ஏனைய விடயங்கள் இடம்பெற்றன.மேலும் மாதாந்த கூட்டம் நடத்த வேண்டிய திகதி தீர்மானித்தல் முன்மொழிவுகள் உள்ளடங்கலாக இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமை நன்றியுடன் நினைவு கூர்ந்த நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 5 ஆவது சபையின் 6 ஆவது சபை அமர்வானது இன்று(26) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.இதன் போது தவிசாளரினால் மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் நினைவு கூறப்பட்டதுடன் அவர் நிந்தவூர் சபைக்கு ஊடகவியலாளராக இருந்து பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியதாக சுட்டிக்காட்டி அனுதாப பிரேரணை ஒன்றினை சபையில் சமர்ப்பித்திருந்தார்.இதற்கமைய சபையில் ஏகமனதாக குறித்த பிரேரணை நிறைவேற்றம் செய்யப்பட்டு பின்னர் மறைந்த ஊடகவியலாளருக்கு சபையில் ஒரு நிமிட மௌன பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அங்கிள் என்றே அவரை நான் அழைப்பேன். சமூகத்தில் மதிப்புமிக்க மூத்த குடிமகனாக விளங்கியதுடன் தனது 77 ஆவது வயதில் சுகயீனமுற்றிருந்த நிலையில் அண்மையில் தனது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது.அவர் நீண்ட ஆயுளில் மதிப்பும் மரியாதையும் நிறைந்து வாழ்க்கையை வாழ்ந்ததுடன் சமூக நலனில் ஆர்வம் உள்ளவராகவும் அனைவராலும் மதிக்கப்படுவதாகவும் இருந்தார்.அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கென ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு மக்களின் மனதில் நீங்காத இடத்தினைப் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.இது தவிர எமது நிந்தவூர் பிரதேச சபை அபிவிருத்தியிலும் நிறைந்த ஒத்துழைப்பினை நல்கி அனைவரது பாராட்டையும் பெற்ற நடுநிலையான ஊடகவியலாளர் இவராவார்.கலாபூஷணம் ஏ. எல்.எம். சலீம், ஊடகத் துறையில் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னணி மூத்த ஊடகவியலாளராக திகழ்ந்தவர்.மற்றும் கிழக்கிலங்கை மட்டங்களில் பல ஊடக அமைப்புகளை உருவாக்கி வளர்த்ததில் அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது.அவரது பணிவும் நேர்மையும் எமது சபை தவிசாளர் உட்பட உறுப்பினர்களை வழிநடத்திய அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை நிந்தவூர் பிரதேச சபை சார்பாகத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இந்த துயர வேளையில் மன அமைதி பொறுமை கிடைக்க பிராத்திக்கின்றேன் இவரின் நினைவு என்றும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும் என சபையில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் தலைமையில் ஏனைய உறுப்பினர்கள் பங்கபற்றலுடன் ஆரம்பமாகின.இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் உரையுடன் தொடர்ச்சியாக ஏனைய விடயங்கள் இடம்பெற்றன.மேலும் மாதாந்த கூட்டம் நடத்த வேண்டிய திகதி தீர்மானித்தல் முன்மொழிவுகள் உள்ளடங்கலாக இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.