• Apr 30 2026

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

shanu / Apr 29th 2026, 10:15 am
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், லண்டனில் நடைபெற்ற தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றபோது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே  இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்குத் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.


வாக்குமூலம் வழங்குவதற்காகத் தனது இல்லத்திற்கு வருமாறு மைத்திரி விக்ரமசிங்க விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு அமைவாகவே, சிஐடி அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.


ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், லண்டனில் நடைபெற்ற தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றபோது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே  இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்குத் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.வாக்குமூலம் வழங்குவதற்காகத் தனது இல்லத்திற்கு வருமாறு மைத்திரி விக்ரமசிங்க விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு அமைவாகவே, சிஐடி அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement