• Aug 27 2026

தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பௌர்ணமி கலை விழா

Aathira / Aug 27th 2026, 12:22 pm
image

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பௌர்ணமி கலை விழா நேற்று மாலை (26) தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி,உப தவிசாளர் வி.விஜயகுமார் ,முள்ளிப்பொத்தானை விகாரையின்  விகாராதிபதி, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மேனகா பாக்கியராஜா உட்பட கலாசார அதிகார சபை நிருவாக உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த இந் நிகழ்வில், பிரதேசத்தின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாத்து அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்,மேற்கத்தைய பல்துறைசார் கலை கலாசார நிகழ்வுகள்,பாடல்கள், நடனங்கள்,  உள்ளிட்ட பல்வேறு கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பௌர்ணமி தினத்தின் ஆன்மிக மற்றும் கலாசார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பிரதேசத்தின் பூவின் சமூகங்களுக்கிடையே  கலை மற்றும் கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாரம்பரிய கலை வடிவங்களை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது.

இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக அதிகாரிகள், கலாசார அதிகார சபையின் உறுப்பினர்கள், கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், கலாசார ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பிரதேசத்தின் கலைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தொடர்ச்சியாக இவ்வாறான கலை மற்றும் கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் அவசியமும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

தம்பலகாமம் பிரதேசத்தில் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பாதுகாத்து வளர்ப்பதற்கான முயற்சிகளில் இத்தகைய நிகழ்வுகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது

தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பௌர்ணமி கலை விழா திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பௌர்ணமி கலை விழா நேற்று மாலை (26) தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி,உப தவிசாளர் வி.விஜயகுமார் ,முள்ளிப்பொத்தானை விகாரையின்  விகாராதிபதி, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மேனகா பாக்கியராஜா உட்பட கலாசார அதிகார சபை நிருவாக உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.குறித்த இந் நிகழ்வில், பிரதேசத்தின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாத்து அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.நிகழ்வில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்,மேற்கத்தைய பல்துறைசார் கலை கலாசார நிகழ்வுகள்,பாடல்கள், நடனங்கள்,  உள்ளிட்ட பல்வேறு கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.பௌர்ணமி தினத்தின் ஆன்மிக மற்றும் கலாசார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பிரதேசத்தின் பூவின் சமூகங்களுக்கிடையே  கலை மற்றும் கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாரம்பரிய கலை வடிவங்களை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது.இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக அதிகாரிகள், கலாசார அதிகார சபையின் உறுப்பினர்கள், கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள், கலாசார ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.பிரதேசத்தின் கலைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தொடர்ச்சியாக இவ்வாறான கலை மற்றும் கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் அவசியமும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.தம்பலகாமம் பிரதேசத்தில் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பாதுகாத்து வளர்ப்பதற்கான முயற்சிகளில் இத்தகைய நிகழ்வுகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement