• Aug 27 2026

ரயில் கடவையில் கோர விபத்து – ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

Chithra / Aug 26th 2026, 12:23 pm
image


புத்தளம் வென்னப்புவ – வைக்கால ரயில் கடவையில் நேற்று (25) மாலை இடம்பெற்ற கோர விபத்தில்ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.


மிக வேகமாக வந்த ரயிலில் குறித்த நபர் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய  ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இவர் வைக்கால பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வென்னப்புவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ரயில் கடவையில் கோர விபத்து – ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு புத்தளம் வென்னப்புவ – வைக்கால ரயில் கடவையில் நேற்று (25) மாலை இடம்பெற்ற கோர விபத்தில்ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.மிக வேகமாக வந்த ரயிலில் குறித்த நபர் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய  ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் வைக்கால பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வென்னப்புவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement