• May 18 2026

கிளியூர் சுப்பர் லீக் (KSL)இருபதுக்கு இருபது துடுப்பாட்ட தொடருக்கான அணிகள் தெரிவு!

shanu / Jan 10th 2026, 7:32 pm
image

கிளியூர் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிளியூர் சுப்பர் லீக் (KSL)இருபதுக்கு இருபது பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்ட தொடருக்கான அணிகள் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்று மாலை கிளிநொச்சி தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது. 


குறித்த சுற்றுத்தொடரின் தலைவர் செல்வராசா ரமேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏச்.சத்தியஜீவிதா கலந்து கொண்டிருந்தார்.


நிகழ்வின் விருந்தினர்களாக வேலாயுதம் சுந்தரலிங்கம் , செயலாளர்  மாவட்ட துடுப்பாட்ட சங்கம் .எம்.ஆர்.மோகன்தாஸ், மாவட்ட விளையாட்டு அதிகாரி - எஸ். குமார் தடகளம், மேசைப் பந்து  பயிற்றுவிப்பாளர், கிளிநொச்சி  மாவட்டம் ஜோய் பியசீலன் முதல்வர் கிளிநொச்சி  இந்து கல்லூரி முதல்வர் டி.கிருபாகரன், வடமாகாண நடுவர்களுக்கான பயிற்றுவிப்பாளர்  இளவேந்தி நிர்மலாராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 


கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபர்,குறித்த போட்டியின் நிறுவுநர் புண்ணியமூர்த்தி சாய்மோகன் ,போட்டியிடுகின்ற பத்து அணிகளின் உரிமையாளர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.குறித்த போட்டியானது பெப்ரவரி மாதம் 07ம் திகதி  போட்டி ஆரம்பமாகவுள்ளது.

கிளியூர் சுப்பர் லீக் (KSL)இருபதுக்கு இருபது துடுப்பாட்ட தொடருக்கான அணிகள் தெரிவு கிளியூர் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிளியூர் சுப்பர் லீக் (KSL)இருபதுக்கு இருபது பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்ட தொடருக்கான அணிகள் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்று மாலை கிளிநொச்சி தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது. குறித்த சுற்றுத்தொடரின் தலைவர் செல்வராசா ரமேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏச்.சத்தியஜீவிதா கலந்து கொண்டிருந்தார்.நிகழ்வின் விருந்தினர்களாக வேலாயுதம் சுந்தரலிங்கம் , செயலாளர்  மாவட்ட துடுப்பாட்ட சங்கம் .எம்.ஆர்.மோகன்தாஸ், மாவட்ட விளையாட்டு அதிகாரி - எஸ். குமார் தடகளம், மேசைப் பந்து  பயிற்றுவிப்பாளர், கிளிநொச்சி  மாவட்டம் ஜோய் பியசீலன் முதல்வர் கிளிநொச்சி  இந்து கல்லூரி முதல்வர் டி.கிருபாகரன், வடமாகாண நடுவர்களுக்கான பயிற்றுவிப்பாளர்  இளவேந்தி நிர்மலாராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபர்,குறித்த போட்டியின் நிறுவுநர் புண்ணியமூர்த்தி சாய்மோகன் ,போட்டியிடுகின்ற பத்து அணிகளின் உரிமையாளர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.குறித்த போட்டியானது பெப்ரவரி மாதம் 07ம் திகதி  போட்டி ஆரம்பமாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement