• Jun 15 2026

தடைக்காலம் முடியும் முன்பே கடலுக்குப் புறப்பட்ட தமிழக மீனவர்கள் - அதிகாரிகள் எச்சரிக்கை

Chithra / Jun 15th 2026, 2:17 pm
image


மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெறாமல் தடையை மீறி நேற்று (14) மாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.


அனுமதியின்றி மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும்.


அதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான 60 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடையை மீறி தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் நேற்று (14) மாலை கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.


மீன் பிடி தடைக்காலம் அமுலில் உள்ள போது அனுமதி சீட்டு இல்லாமல் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் சோதனை செய்யப்பட்டு அனைத்து விசைப்படகுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


60 நாள் மீன்பிடி தடைக்காலம் அமுலில் இருந்ததால் ராமேஸ்வரம் மண்டபம் பாம்பன் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் தற்போது மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றதால் பரபரப்பாக காணப்பட்டது.

தடைக்காலம் முடியும் முன்பே கடலுக்குப் புறப்பட்ட தமிழக மீனவர்கள் - அதிகாரிகள் எச்சரிக்கை மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெறாமல் தடையை மீறி நேற்று (14) மாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.அனுமதியின்றி மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும்.அதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான 60 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடையை மீறி தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் நேற்று (14) மாலை கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.மீன் பிடி தடைக்காலம் அமுலில் உள்ள போது அனுமதி சீட்டு இல்லாமல் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் சோதனை செய்யப்பட்டு அனைத்து விசைப்படகுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.60 நாள் மீன்பிடி தடைக்காலம் அமுலில் இருந்ததால் ராமேஸ்வரம் மண்டபம் பாம்பன் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் தற்போது மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றதால் பரபரப்பாக காணப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement