• May 17 2026

மனநல நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு மீனவர் சிறையில்! மனிதாபிமான முறையில் விடுவிக்குமாறு கண்ணீர் விடும் உறவினர்கள்

Chithra / Jan 6th 2026, 11:17 am
image

 


இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 30/12/2026 அன்று கைது செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி மீனவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று பிற்பகல் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தமிழ்நாடு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 30ஆம் திகதி அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து ஒரு மீன்பிடி படகையும் அதிலிருந்த  மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் மீனவர் பிரபு மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தும்  சிகிக்சை பெற்று வருவதாகவும், நாளாந்தம் தூக்க மருந்து பாவிப்பவர் என்றும், கடந்த 3ம் திகதி  மதுரையில் உளவியல் ரீதியாக சிகிச்சை பெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். 


தற்போது மீனவர் பிரபு தூக்க மாத்திரை பாவிக்காமலும்,  உடைகளை மாற்றாமல் உணவு உண்ணாமல் மன நலம் பாதிக்கப்பட்டவாறு இருப்பதாக உடன் இருக்கும் மீனவர்கள் தெரிவித்ததாக பிரபுவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 

மனநல நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு மீனவர் சிறையில் மனிதாபிமான முறையில் விடுவிக்குமாறு கண்ணீர் விடும் உறவினர்கள்  இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 30/12/2026 அன்று கைது செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி மீனவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று பிற்பகல் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 30ஆம் திகதி அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து ஒரு மீன்பிடி படகையும் அதிலிருந்த  மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மீனவர் பிரபு மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தும்  சிகிக்சை பெற்று வருவதாகவும், நாளாந்தம் தூக்க மருந்து பாவிப்பவர் என்றும், கடந்த 3ம் திகதி  மதுரையில் உளவியல் ரீதியாக சிகிச்சை பெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். தற்போது மீனவர் பிரபு தூக்க மாத்திரை பாவிக்காமலும்,  உடைகளை மாற்றாமல் உணவு உண்ணாமல் மன நலம் பாதிக்கப்பட்டவாறு இருப்பதாக உடன் இருக்கும் மீனவர்கள் தெரிவித்ததாக பிரபுவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement