• Jun 06 2026

நாட்டின் பல பகுதிகளில் சுழற்றியடிக்கும் காற்று - வெளியாகிய எச்சரிக்கை!

shanu / Jun 5th 2026, 9:09 pm
image

நாட்டின் பல பகுதிகளில்  காற்று சுழற்றியடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு  வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இந்த அறிவிப்பு நாளை (06) பிற்பகல் 3.30 மணி வரை அமுலில் இருக்கும்  எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில்  மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.


இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் சுழற்றியடிக்கும் காற்று - வெளியாகிய எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில்  காற்று சுழற்றியடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு  வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு நாளை (06) பிற்பகல் 3.30 மணி வரை அமுலில் இருக்கும்  எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில்  மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement