• Sep 14 2026

அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூதூரில் மாணவர்களுக்கு கௌரவிப்பு.

dorin / Sep 13th 2026, 11:11 am
image

அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூதூரில் மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு  (12) சனிக்கிழமை மூதூரில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மூதூரில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் சிங்கள மொழிப் பாடநெறியில் கல்வி கற்ற மாணவர்களைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  

இதன்போது கலை,கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, சங்கத்தின் தலைவர் யூசுப் லாபீர் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் கல்விச் சாதனைகளுக்குப் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். திஸாநாயக்க, கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் அஸ்மி, மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ்,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.கனி, மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் சமீர், மூதூர் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர்களான எம்.ஏ. அறூஸ் மற்றும் எம். கரீஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமென நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.  

அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூதூரில் மாணவர்களுக்கு கௌரவிப்பு. அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூதூரில் மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு  (12) சனிக்கிழமை மூதூரில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் மூதூரில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் சிங்கள மொழிப் பாடநெறியில் கல்வி கற்ற மாணவர்களைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  இதன்போது கலை,கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, சங்கத்தின் தலைவர் யூசுப் லாபீர் தலைமையில் இடம்பெற்றது.மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் கல்விச் சாதனைகளுக்குப் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். திஸாநாயக்க, கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் அஸ்மி, மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ்,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.கனி, மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் சமீர், மூதூர் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர்களான எம்.ஏ. அறூஸ் மற்றும் எம். கரீஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமென நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.  

Advertisement

Advertisement

Advertisement