• Sep 29 2026

மாணவர் பேருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு – ஒக்டோபர் 24க்கு பின்னர் அதிரடி நடவடிக்கை!

Chithra / Sep 29th 2026, 12:09 pm
image


வடக்கு மாகாணத்தில் மாணவர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


உரிய அனுமதியின்றி இயக்கப்படும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மாணவர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் 15 வருடங்களுக்குள் பழமையானவையாக இருக்க வேண்டும். 15 வருடங்கள் பழமையான பேருந்துகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து தகுதிச் சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும்.


இதற்கிடையில், மாணவர்களுக்கு கட்டணச் சலுகைகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீதமும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும்.


 பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும் 50 சதவீத சலுகை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், முக்கியமான காலக்கெடு ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர் போக்குவரத்து சேவைகளுக்கான அனுமதிகளை புதுப்பிக்க எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


அதன் பின்னர் அனுமதிகளை புதுப்பிக்கத் தவறும் பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவை கைப்பற்றப்படும் என அதிகார சபையின் தலைவர் எச்சரித்துள்ளார்.


மாணவர் பேருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு – ஒக்டோபர் 24க்கு பின்னர் அதிரடி நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் மாணவர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.உரிய அனுமதியின்றி இயக்கப்படும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மாணவர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் 15 வருடங்களுக்குள் பழமையானவையாக இருக்க வேண்டும். 15 வருடங்கள் பழமையான பேருந்துகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து தகுதிச் சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும்.இதற்கிடையில், மாணவர்களுக்கு கட்டணச் சலுகைகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீதமும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும் 50 சதவீத சலுகை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், முக்கியமான காலக்கெடு ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் போக்குவரத்து சேவைகளுக்கான அனுமதிகளை புதுப்பிக்க எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் அனுமதிகளை புதுப்பிக்கத் தவறும் பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவை கைப்பற்றப்படும் என அதிகார சபையின் தலைவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement