• May 20 2026

புதுக்குடியிருப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

Chithra / May 19th 2026, 10:39 am
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் மற்றும் உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் ஆகியோர் இணைந்து புதுக்குடியிருப்பு நகரை அண்டிய உணவகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.


சோதனைகளின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை, ஈக்கள் மொய்த்த நிலையில் உணவுகள் வைக்கப்பட்டமை, பாத்திரங்களை தூய்மையாக வைத்திருக்காமை, மருத்துவ சான்றிதழ் இன்றி ஊழியர்கள் உணவுகளை கையாண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டதனையடுத்து சம்பந்தப்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தனால் கடந்த வெள்ளிக்கிழமை (15) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.


வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு உணவகங்களுக்கும் தலா முப்பதாயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக அறுபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், புதுக்குடியிருப்பு – பரந்தன் பிரதான வீதியில் அமைந்திருந்த ஒரு உணவகத்தை சீல் வைப்பதற்கும் அனுமதி வழங்கியது.


அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்பார்வை பரிசோதகர் ரதன்,பொது சுகாதார பரிசோதகர்களான சுரேஸ் ஆனந்தன், பிரதாஸ் மற்றும் றொஜிஸ்ரன் ஆகியோரால் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த உணவகத்தை நேற்றையதினம் (18) சீல் வைத்தனர்.


புதுக்குடியிருப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் மற்றும் உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் ஆகியோர் இணைந்து புதுக்குடியிருப்பு நகரை அண்டிய உணவகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.சோதனைகளின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை, ஈக்கள் மொய்த்த நிலையில் உணவுகள் வைக்கப்பட்டமை, பாத்திரங்களை தூய்மையாக வைத்திருக்காமை, மருத்துவ சான்றிதழ் இன்றி ஊழியர்கள் உணவுகளை கையாண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டதனையடுத்து சம்பந்தப்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தனால் கடந்த வெள்ளிக்கிழமை (15) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு உணவகங்களுக்கும் தலா முப்பதாயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக அறுபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், புதுக்குடியிருப்பு – பரந்தன் பிரதான வீதியில் அமைந்திருந்த ஒரு உணவகத்தை சீல் வைப்பதற்கும் அனுமதி வழங்கியது.அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்பார்வை பரிசோதகர் ரதன்,பொது சுகாதார பரிசோதகர்களான சுரேஸ் ஆனந்தன், பிரதாஸ் மற்றும் றொஜிஸ்ரன் ஆகியோரால் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த உணவகத்தை நேற்றையதினம் (18) சீல் வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement