• Jun 20 2026

விமான நிலையத்தில் பிடிபட்ட வெளிநாட்டவர்... கைப்பற்றப்பட்ட பொருளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Aathira / Jun 20th 2026, 8:13 am
image

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பெருமளவிலான போதைப்பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

அவரிடமிருந்து சுமார் 37 கிலோகிராம் எடையுடைய ஹஷீஷ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் இதன் பெறுமதி சுமார் 377 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்குள் சட்டவிரோதமாக போதைப்பொருளை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் சந்தேகநபரும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

விமான நிலையத்தில் பிடிபட்ட வெளிநாட்டவர். கைப்பற்றப்பட்ட பொருளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பெருமளவிலான போதைப்பொருளை கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.அவரிடமிருந்து சுமார் 37 கிலோகிராம் எடையுடைய ஹஷீஷ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் பெறுமதி சுமார் 377 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டிற்குள் சட்டவிரோதமாக போதைப்பொருளை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் சந்தேகநபரும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement