• May 18 2026

பங்குச் சந்தை பிதாமகன் வாரன் பபெட் ஓய்வு!

shanu / Jan 2nd 2026, 12:09 pm
image

பெர்க்சயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பொறுப்பிலிருந்து அனுபவம் வாய்ந்த பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பபெட் நேற்று (1) முதல் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அவர் தமது ஓய்வு குறித்த அறிவிப்பை வௌியிட்ட நிலையில், தமது 94 வயதுடன் அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

அவருக்கு பின்னர் அவரது பொறுப்புகள் கிரெக் ஏபல்லிடம் (Greg Abel)ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தோல்வியடைந்து கொண்டிருந்த ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தை, 1.16 டிரில்லியன் டொலர்​ மதிப்புள்ள ஒரு மாபெரும் முதலீட்டு நிறுவனமாக மாற்றிய பபெட், உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளராகக் கருதப்படுகிறார்.

தமது மூளையை முதலீடாக கொண்டு அமர்ந்த இடத்தில் இருந்தே கோடிகளை அள்ளும் மாபெரும் முதலீட்டாளரான வாரன் பபெட் பங்குச் சந்தை உலகின் தந்தையாகவும் விளங்குகிறார்.

2025 ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 160 -169 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை பிதாமகன் வாரன் பபெட் ஓய்வு பெர்க்சயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பொறுப்பிலிருந்து அனுபவம் வாய்ந்த பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பபெட் நேற்று (1) முதல் ஓய்வு பெற்றுள்ளார். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அவர் தமது ஓய்வு குறித்த அறிவிப்பை வௌியிட்ட நிலையில், தமது 94 வயதுடன் அவர் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பின்னர் அவரது பொறுப்புகள் கிரெக் ஏபல்லிடம் (Greg Abel)ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்து கொண்டிருந்த ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தை, 1.16 டிரில்லியன் டொலர்​ மதிப்புள்ள ஒரு மாபெரும் முதலீட்டு நிறுவனமாக மாற்றிய பபெட், உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளராகக் கருதப்படுகிறார். தமது மூளையை முதலீடாக கொண்டு அமர்ந்த இடத்தில் இருந்தே கோடிகளை அள்ளும் மாபெரும் முதலீட்டாளரான வாரன் பபெட் பங்குச் சந்தை உலகின் தந்தையாகவும் விளங்குகிறார். 2025 ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 160 -169 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement