• May 09 2026

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

Ziya / May 8th 2026, 3:36 pm
image

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் சந்தை நிர்வாகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் பருத்தித்துறை நகர சபையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

மீன் சந்தை வியாபாரிகள் சார்பில் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்று தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கலந்துரையாடலின் போது, வியாபாரிகள் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மீனை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கான கூலரின் தேவை தொடர்பாக அதிகாரிகள் முன்னிலையில் விவரித்தனர்.

சந்தையின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான குறைபாடுகள்.தினசரி வியாபாரத்தின் போது எதிர்கொள்ளும் நிர்வாக ரீதியான நெருக்கடிகள்.சுகாதார மற்றும் கழிவு முகாமைத்துவத்தில் உள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது 

வியாபாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த தவிசாளர் மற்றும் செயலாளர், அவற்றுக்கான உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

"வியாபாரிகளின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சந்தை நடவடிக்கைகளை முறைப்படுத்தவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என நகர சபை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சந்தை நடவடிக்கைகளை எவ்வாறு செம்மையாகக் கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்கள் எழாமல் தவிர்ப்பது குறித்த முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்டன.

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல் பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் சந்தை நிர்வாகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் பருத்தித்துறை நகர சபையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மீன் சந்தை வியாபாரிகள் சார்பில் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்று தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.கலந்துரையாடலின் போது, வியாபாரிகள் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மீனை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கான கூலரின் தேவை தொடர்பாக அதிகாரிகள் முன்னிலையில் விவரித்தனர்.சந்தையின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான குறைபாடுகள்.தினசரி வியாபாரத்தின் போது எதிர்கொள்ளும் நிர்வாக ரீதியான நெருக்கடிகள்.சுகாதார மற்றும் கழிவு முகாமைத்துவத்தில் உள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது வியாபாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த தவிசாளர் மற்றும் செயலாளர், அவற்றுக்கான உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்."வியாபாரிகளின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சந்தை நடவடிக்கைகளை முறைப்படுத்தவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என நகர சபை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, சந்தை நடவடிக்கைகளை எவ்வாறு செம்மையாகக் கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்கள் எழாமல் தவிர்ப்பது குறித்த முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement