• May 20 2026

தென்மேற்குப் பருவமழை தீவிரம்; அபாயகரமாக மாறும் கடல்! மீனவர்கள் எடுத்த முடிவு

Chithra / May 19th 2026, 7:15 pm
image

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இன்று (19) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகின்றது.


மேலும் வடக்கு மாகாணத்திலும், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யலாம். அதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு நிலவுகிறது.


காற்று நிலைமையைப் பொறுத்தவரை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் மற்றும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.


இதனிடையே, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் எனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


இதேவேளை, புத்தளம் – உடப்பு பகுதியில் தற்போது தென்மேல் பருவக்காற்று தாக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடலலைகள் சீற்றமடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர்.


கடற்கரையோரங்களில் கடலரிப்பு தீவிரமடைந்து, சில இடங்களில் சுமார் ஐந்து அடி ஆழம் வரை கரை அரிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நீண்டகாலமாக கடல் அலைகளால் கரையரிப்பு ஏற்பட்டு, கடல் கரையை ஆக்கிரமித்து வரும் நிலை தொடர்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

தென்மேற்குப் பருவமழை தீவிரம்; அபாயகரமாக மாறும் கடல் மீனவர்கள் எடுத்த முடிவு நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று (19) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகின்றது.மேலும் வடக்கு மாகாணத்திலும், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யலாம். அதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு நிலவுகிறது.காற்று நிலைமையைப் பொறுத்தவரை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் மற்றும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.இதனிடையே, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் எனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதேவேளை, புத்தளம் – உடப்பு பகுதியில் தற்போது தென்மேல் பருவக்காற்று தாக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடலலைகள் சீற்றமடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர்.கடற்கரையோரங்களில் கடலரிப்பு தீவிரமடைந்து, சில இடங்களில் சுமார் ஐந்து அடி ஆழம் வரை கரை அரிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நீண்டகாலமாக கடல் அலைகளால் கரையரிப்பு ஏற்பட்டு, கடல் கரையை ஆக்கிரமித்து வரும் நிலை தொடர்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement