• Oct 05 2026

சவர்மா சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி; மட்டக்களப்பில் பரபரப்பு

Chithra / Oct 5th 2026, 3:37 pm
image


மட்டக்களப்பு – ஓட்டமாவடி, பிறைந்துரைச்சேனை பகுதியில்  14 மாணவிகள் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


8ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவிகள் வெள்ளிக்கிழமை (2) மாலை ஒன்றாகச் சேர்ந்து சவர்மா ஓடர் செய்து உட்கொண்டுள்ளனர்.


இதனையடுத்து, மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.


இதனால் 14 மாணவிகளும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 

ஒரு மாணவி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இதற்கிடையில், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம். நஜீப்கான் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சவர்மா சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி; மட்டக்களப்பில் பரபரப்பு மட்டக்களப்பு – ஓட்டமாவடி, பிறைந்துரைச்சேனை பகுதியில்  14 மாணவிகள் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.8ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவிகள் வெள்ளிக்கிழமை (2) மாலை ஒன்றாகச் சேர்ந்து சவர்மா ஓடர் செய்து உட்கொண்டுள்ளனர்.இதனையடுத்து, மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் 14 மாணவிகளும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு மாணவி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதற்கிடையில், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம். நஜீப்கான் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement