நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி 07 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு 11 மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையான அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று(17) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள், தென் மாகாணம், மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பலத்த மின்னல் அபாயம் - 07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி 07 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு 11 மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையான அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இன்று(17) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள், தென் மாகாணம், மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.