புனித பிலிப்பு நேரியார் ஆலயம் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த பெருவிழா எதிர்வரும் மே மாதம் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 17.05.2026 அன்று மாலை 5.00 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா திருப்பலி ஆரம்பமாகவுள்ளது.
மேலும், 25.05.2026 அன்று மாலை 5.00 மணிக்கு நற்கருணை பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
அதேவேளை, 26.05.2026 அன்று காலை 6.30 மணியளவில் நடைபெறும் பெருவிழா கூட்டுத்திருப்பலியை ஜெயந்தன் பச்சேக் அமலரித்தியாகிகள் தலைமையேற்று நடத்தவுள்ளார்.
திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை பகுதிகளிலிருந்து விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், திருவிழா மேடைகளுக்கான வியாபாரப் பதிவுகள் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என்றும், வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக 0771748741 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழா நாளில் மாலை நேரத்தில் ஆலய முன்றலில் “யுவானியர் தென் மோடி நாட்டுக்கூத்து” கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனிதரின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள அனைத்து இறைமக்களும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.
செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய பெருவிழா – விசேட அறிவிப்பு வெளியீடு புனித பிலிப்பு நேரியார் ஆலயம் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த பெருவிழா எதிர்வரும் மே மாதம் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் அறிவித்துள்ளனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் 17.05.2026 அன்று மாலை 5.00 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா திருப்பலி ஆரம்பமாகவுள்ளது.மேலும், 25.05.2026 அன்று மாலை 5.00 மணிக்கு நற்கருணை பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.அதேவேளை, 26.05.2026 அன்று காலை 6.30 மணியளவில் நடைபெறும் பெருவிழா கூட்டுத்திருப்பலியை ஜெயந்தன் பச்சேக் அமலரித்தியாகிகள் தலைமையேற்று நடத்தவுள்ளார்.திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை பகுதிகளிலிருந்து விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும், திருவிழா மேடைகளுக்கான வியாபாரப் பதிவுகள் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என்றும், வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக 0771748741 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவிழா நாளில் மாலை நேரத்தில் ஆலய முன்றலில் “யுவானியர் தென் மோடி நாட்டுக்கூத்து” கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புனிதரின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள அனைத்து இறைமக்களும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.