• Apr 22 2026

போயா விடுமுறையில் வீட்டில் மதுபான விற்பனை; போதை ஒழிப்புப் பிரிவின் சுற்றிவளைப்பில் நபர் கைது!

shanu / Oct 6th 2025, 6:43 pm
image

போயா விடுமுறை நாளில்  வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கல்முனை பிராந்திய   போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு குழுவினருக்குக்  கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து  வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான போத்தல்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.


கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பில்  போயா விடுமுறை நாளான இன்று  குறித்த விற்பனையில் ஈடுபடுவதாக சந்தேக நபர் தொடர்பான   தகவல்கள் கிடைக்கப்பெற்றதை  அடுத்து போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர்  மாறுவேடத்தில் சென்று   குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இவ்வாறு கைதானவர்   சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக  மறைத்து வைத்திருந்த  மதுபான போத்தல்கள்  பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

போயா விடுமுறையில் வீட்டில் மதுபான விற்பனை; போதை ஒழிப்புப் பிரிவின் சுற்றிவளைப்பில் நபர் கைது போயா விடுமுறை நாளில்  வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பிராந்திய   போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு குழுவினருக்குக்  கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து  வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான போத்தல்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பில்  போயா விடுமுறை நாளான இன்று  குறித்த விற்பனையில் ஈடுபடுவதாக சந்தேக நபர் தொடர்பான   தகவல்கள் கிடைக்கப்பெற்றதை  அடுத்து போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர்  மாறுவேடத்தில் சென்று   குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு கைதானவர்   சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக  மறைத்து வைத்திருந்த  மதுபான போத்தல்கள்  பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement