• Oct 02 2026

நிர்ணய விலையை மீறி விற்பனை – இரு வர்த்தக நிறுவனங்களுக்கு லட்சங்களில் அபராதம்!

Chithra / Oct 2nd 2026, 7:36 am
image


நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்த விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த இரு வர்த்தக நிறுவனங்களுக்கு நீதிமன்றங்கள் கடும் அபராதம் விதித்துள்ளன.


பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்று, 500 மில்லிலீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட 80 ரூபாய்க்குப் பதிலாக 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கண்டறியப்பட்டது.


இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


இதற்கிடையில், பதுளை நகரிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்தமைக்காக நீதிமன்றத்தில் குற்றவாளியாகியுள்ளது.


5 கிலோகிராம் கீரி சம்பா அரிசிப் பொதியை 1,300 ரூபாய்க்குப் பதிலாக 1,850 ரூபாய்க்கு விற்பனை செய்த குறித்த நிறுவனத்திற்கு பதுளை நீதவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


இதற்கமைய, ஒரு கிலோ கிராமிற்கு நிர்ணயிக்கப்பட்ட 260 ரூபாவிற்குப் பதிலாக 370 ரூபா வீதம், அதாவது ஒரு கிலோ கிராமிற்கு 110 ரூபா வீதம் மேலதிகமாக அறவிடப்பட்டுள்ளதுடன், 5 கிலோ கிராம் பொதிக்காக மேலதிகமாக அறவிடப்பட்ட மொத்தத் தொகை 550 ரூபாவாகும். 


அத்துடன், கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான தகவல்களை 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிர்ணய விலையை மீறி விற்பனை – இரு வர்த்தக நிறுவனங்களுக்கு லட்சங்களில் அபராதம் நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்த விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த இரு வர்த்தக நிறுவனங்களுக்கு நீதிமன்றங்கள் கடும் அபராதம் விதித்துள்ளன.பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்று, 500 மில்லிலீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட 80 ரூபாய்க்குப் பதிலாக 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கண்டறியப்பட்டது.இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.இதற்கிடையில், பதுளை நகரிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்தமைக்காக நீதிமன்றத்தில் குற்றவாளியாகியுள்ளது.5 கிலோகிராம் கீரி சம்பா அரிசிப் பொதியை 1,300 ரூபாய்க்குப் பதிலாக 1,850 ரூபாய்க்கு விற்பனை செய்த குறித்த நிறுவனத்திற்கு பதுளை நீதவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.இதற்கமைய, ஒரு கிலோ கிராமிற்கு நிர்ணயிக்கப்பட்ட 260 ரூபாவிற்குப் பதிலாக 370 ரூபா வீதம், அதாவது ஒரு கிலோ கிராமிற்கு 110 ரூபா வீதம் மேலதிகமாக அறவிடப்பட்டுள்ளதுடன், 5 கிலோ கிராம் பொதிக்காக மேலதிகமாக அறவிடப்பட்ட மொத்தத் தொகை 550 ரூபாவாகும். அத்துடன், கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான தகவல்களை 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement