• May 18 2026

மாற்றுத் திறனாளிகளுக்கான சுய உதவி குழு கூட்டம்!

shanu / Oct 14th 2025, 1:48 pm
image

திருகோணமலை ,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தவும் பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்ளீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (14)பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.


தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த பிரதேச மட்ட சுய உதவி கலந்துரையாடலில் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக அமைக்கப்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் பராமரிப்பு நிலையத்தில் ஆறு மாதம் தொடக்கம் 18 வயது வரையான மாற்றுத் திறனாளிகளை உள்வாங்குவது தொடர்பிலும் எதிர் காலத்தில் சமூகத்துடன் இணைந்த விசேடமானவர்களை வலுப்படுத்தவும் நல்லதொரு திட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மாவட்ட செயலக சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.


மாற்றுத் திறனாளிகளுக்கான சுய உதவி குழு கூட்டம் திருகோணமலை ,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தவும் பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்ளீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (14)பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த பிரதேச மட்ட சுய உதவி கலந்துரையாடலில் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக அமைக்கப்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் பராமரிப்பு நிலையத்தில் ஆறு மாதம் தொடக்கம் 18 வயது வரையான மாற்றுத் திறனாளிகளை உள்வாங்குவது தொடர்பிலும் எதிர் காலத்தில் சமூகத்துடன் இணைந்த விசேடமானவர்களை வலுப்படுத்தவும் நல்லதொரு திட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மாவட்ட செயலக சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement