• Apr 19 2026

நீதிமன்றில் முன்னிலையான சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்!

shanu / Jan 28th 2026, 4:46 pm
image

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். 


விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.


இதேவேளை, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்னிலையாவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.


நீதிமன்றில் முன்னிலையான சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.இதேவேளை, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்னிலையாவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement