தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் சென்னை தலைமை செயலகம் வந்து முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய், பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்தார்.
முன்னதாக அங்கு அளித்த பொலிஸ் மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அவருக்கு துறை சார்ந்த அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. தற்காலிக சபாநாயகர் சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்
நாளை மறுதினம் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.
கோட்டையில் சல்யூட் அடித்து வரவேற்பு; முதல்வர் சீட்டில் மாஸாக அமர்ந்த விஜய் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் சென்னை தலைமை செயலகம் வந்து முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய், பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்தார். முன்னதாக அங்கு அளித்த பொலிஸ் மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அவருக்கு துறை சார்ந்த அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில் தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. தற்காலிக சபாநாயகர் சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்நாளை மறுதினம் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.