மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் காலாவதியான உணவுப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டதால் வர்த்தக நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய வர்த்தக நிலையத்தில் இன்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சோதனையின் போது விற்பனை நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையிலும் அழுகிய பழங்கள் மரக்கறிகளை விற்பனைக்காக வைத்திருந்ததன் அடிப்படையிலும் களஞ்சிய சாலை சுகாதாரமான முறையின் பேணப்படமையின் அடிப்படையிலும் விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அழிக்கப்படவுள்ளதுடன் விற்பனை நிலையத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏனைய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
காலவதியான உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்துக்கு சீல் வைப்பு மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் காலாவதியான உணவுப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டதால் வர்த்தக நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய வர்த்தக நிலையத்தில் இன்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். சோதனையின் போது விற்பனை நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையிலும் அழுகிய பழங்கள் மரக்கறிகளை விற்பனைக்காக வைத்திருந்ததன் அடிப்படையிலும் களஞ்சிய சாலை சுகாதாரமான முறையின் பேணப்படமையின் அடிப்படையிலும் விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அழிக்கப்படவுள்ளதுடன் விற்பனை நிலையத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏனைய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.