• May 19 2026

கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட ரஷ்யப் பெண் பாதுகாப்பாக மீட்பு !

shanu / Dec 20th 2025, 10:45 am
image

ஹிக்கடுவ கடல் அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்யப் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.


ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரால்  நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை  அவர் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 


கடற்கரையில் பணியில் இருந்த ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் அலுவலர்  புஷ்பகுமார, பொலிஸ் கான்ஸ்டபிள் ஹர்ஷ மற்றும் மிகிந்து ஆகியோர் குறித்த பெண்ணை மீட்டு அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.


விபத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பெண் ரஷ்ய நாட்டை சேர்ந்த, 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட ரஷ்யப் பெண் பாதுகாப்பாக மீட்பு ஹிக்கடுவ கடல் அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்யப் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரால்  நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை  அவர் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையில் பணியில் இருந்த ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் அலுவலர்  புஷ்பகுமார, பொலிஸ் கான்ஸ்டபிள் ஹர்ஷ மற்றும் மிகிந்து ஆகியோர் குறித்த பெண்ணை மீட்டு அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.விபத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பெண் ரஷ்ய நாட்டை சேர்ந்த, 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement