மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு பெரியகல்லாறு போன்ற கிராமங்களை கரையோரமாக இணைக்கும் பாதை 21 வருடங்களாக கவனிப்பார் அற்ற நிலையில் காணப்பட்ட நிலையில் அதனை செப்பனிடும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
பெரியகல்லாறு மீனவர் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய உடனடியாக 1.5 கிலோமீட்டர் பாதையினை செப்பனிடுவதற்கு தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் நடவடிக்கை எடுத்தார்.
மீனவர்கள் மீன்களை பிடித்து கொண்டு சுமார் 1 கிலோமீட்டருக்கும் அதிகமாக மீன்களை கூடைகளில் சுமந்து கொண்டு சென்று வந்த நிலையில் , பல்வேறு அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், என பலரிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்த நிலையில், அந்த முயற்சி எதுவும் வெற்றியளிக்காத போது ஒரு வாரத்திற்குள் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம் மீனவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வீதியை செப்பனிட்ட தவிசாளருக்கு நன்றியையும் தெரிவித்தனர்.
21 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் செப்பனிடப்படும் வீதி மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு பெரியகல்லாறு போன்ற கிராமங்களை கரையோரமாக இணைக்கும் பாதை 21 வருடங்களாக கவனிப்பார் அற்ற நிலையில் காணப்பட்ட நிலையில் அதனை செப்பனிடும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுபெரியகல்லாறு மீனவர் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய உடனடியாக 1.5 கிலோமீட்டர் பாதையினை செப்பனிடுவதற்கு தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் நடவடிக்கை எடுத்தார்.மீனவர்கள் மீன்களை பிடித்து கொண்டு சுமார் 1 கிலோமீட்டருக்கும் அதிகமாக மீன்களை கூடைகளில் சுமந்து கொண்டு சென்று வந்த நிலையில் , பல்வேறு அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், என பலரிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்த நிலையில், அந்த முயற்சி எதுவும் வெற்றியளிக்காத போது ஒரு வாரத்திற்குள் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம் மீனவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வீதியை செப்பனிட்ட தவிசாளருக்கு நன்றியையும் தெரிவித்தனர்.