• Apr 21 2026

எலி காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Apr 21st 2026, 11:19 am
image

புத்தாண்டு காலங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது, எலி காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பெரும்பாலான புத்தாண்டு நிகழ்வுகள் நீர் நிலைகள், சிறிய குளங்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.


இவ்வாறான பகுதிகளில் விளையாட்டுகளில் ஈடுபடுவது எலி காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, நோய் பரவும் வாய்ப்பை அதிகப்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


பொதுமக்கள் கடும் காய்ச்சல் மற்றும் தசை வலி ஆகிய அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில்,  உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எலி காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை புத்தாண்டு காலங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது, எலி காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.பெரும்பாலான புத்தாண்டு நிகழ்வுகள் நீர் நிலைகள், சிறிய குளங்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.இவ்வாறான பகுதிகளில் விளையாட்டுகளில் ஈடுபடுவது எலி காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, நோய் பரவும் வாய்ப்பை அதிகப்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பொதுமக்கள் கடும் காய்ச்சல் மற்றும் தசை வலி ஆகிய அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில்,  உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement