இலங்கையில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் மத்தியில் HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகள் நிறைவடையும் வரையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் 88 புதிய HIV தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணரத்ன, 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் போது நாட்டில் 708 புதிய HIV தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 1987ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது HIV தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, இதுவரை மொத்தம் 8,111 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV தொற்று வெளியான அதிர்ச்சித் தகவல் இலங்கையில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் மத்தியில் HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகள் நிறைவடையும் வரையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் 88 புதிய HIV தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.அவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணரத்ன, 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் போது நாட்டில் 708 புதிய HIV தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.மேலும், 1987ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது HIV தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, இதுவரை மொத்தம் 8,111 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.