முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்கு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அழைப்பு விடுத்துள்ளது.
சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணத்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், பிரதிவாதி யோஷித ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்,
ரோஹித ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்கு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அழைப்பு விடுத்துள்ளது.சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பணத்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், பிரதிவாதி யோஷித ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்,