• Apr 18 2026

காலி மாநகர சபை அமர்வில் அமளி துமளி; 05 உறுப்பினர்கள் அதிரடிக் கைது!

Chithra / Dec 31st 2025, 12:18 pm
image

 

காலி மாநகர சபை அமர்வின் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக  ஐந்து மாநகர சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்றைய குழப்பம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், பெண் கவுன்சிலர் உட்பட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சபை செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


காலி மாநகர சபையில் நேற்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. 


மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையினால் சபையில் அமைதியற்ற சூழல் உருவானது. 


இதன்போது, “திருடன் திருடன், எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்” என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர். 


மேயர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றார். எனினும், அதன் பின்னர் குழுநிலை அமர்வு அறிவிக்கப்பட்டவுடன், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். 


இந்த நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, சபையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறியிருந்தார்.

காலி மாநகர சபை அமர்வில் அமளி துமளி; 05 உறுப்பினர்கள் அதிரடிக் கைது  காலி மாநகர சபை அமர்வின் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக  ஐந்து மாநகர சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய குழப்பம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், பெண் கவுன்சிலர் உட்பட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சபை செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.காலி மாநகர சபையில் நேற்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையினால் சபையில் அமைதியற்ற சூழல் உருவானது. இதன்போது, “திருடன் திருடன், எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்” என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர். மேயர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றார். எனினும், அதன் பின்னர் குழுநிலை அமர்வு அறிவிக்கப்பட்டவுடன், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, சபையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement