• May 20 2026

வெள்ள அனர்த்தம் காரணமாக நெற்செய்கை பாதிப்பு

Aathira / Dec 13th 2025, 2:15 pm
image

வெள்ள அனர்த்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்டத்திலே ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 7739.5 ஏக்கர் நெற்செய்கையானது அழிவடைந்துள்ளது.

வவுனியா மாவட்டத்திலே இம்முறை பெரும்போக நெற்செய்கையானது 62846.41 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது.

வருட மழைவீழ்ச்சியில் 68 வீதமான மழை வீழ்ச்சியானது, நான்கு நாட்களில் பெய்ததால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, 

குளங்களும் வான் பாய்ந்திருந்தமையாலும், 124 குளங்கள் உடைப்பெடுத்து வயல் நிலங்கள் நீரில் மூழ்கின.

ஒரு ஏக்கருக்கு 1.5 லட்சம் ரூபா செலவு செய்து வங்கிக் கடன், நகை அடகு செய்து பயிரிட்ட விவசாயிகள் இப்போது நட்டத்தில் தவிக்கின்றனர்.

இதனால் அரசு ஹெக்டயருக்கு 1.5 லட்சம் ரூபா இழப்பீடு அறிவித்துள்ளதால், இப்பணத்தை விரைவாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.


வெள்ள அனர்த்தம் காரணமாக நெற்செய்கை பாதிப்பு வெள்ள அனர்த்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.வவுனியா மாவட்டத்திலே ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 7739.5 ஏக்கர் நெற்செய்கையானது அழிவடைந்துள்ளது.வவுனியா மாவட்டத்திலே இம்முறை பெரும்போக நெற்செய்கையானது 62846.41 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது.வருட மழைவீழ்ச்சியில் 68 வீதமான மழை வீழ்ச்சியானது, நான்கு நாட்களில் பெய்ததால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, குளங்களும் வான் பாய்ந்திருந்தமையாலும், 124 குளங்கள் உடைப்பெடுத்து வயல் நிலங்கள் நீரில் மூழ்கின.ஒரு ஏக்கருக்கு 1.5 லட்சம் ரூபா செலவு செய்து வங்கிக் கடன், நகை அடகு செய்து பயிரிட்ட விவசாயிகள் இப்போது நட்டத்தில் தவிக்கின்றனர்.இதனால் அரசு ஹெக்டயருக்கு 1.5 லட்சம் ரூபா இழப்பீடு அறிவித்துள்ளதால், இப்பணத்தை விரைவாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement