மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட கூட்டம் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள், திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டார்கள்.
கடந்த பல வருடங்களாக இந்த ஈவு வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருக்கிறது. அந்த வகையில் அவற்றை தீர்ப்பதற்கான காத்திரமான ஒரு கூட்டம் இடம்பெற்றது.
இந்த வருடம் 32 ஏக்கர் விவசாய பூமி ஏலம் விடப்பட்டிருக்கிறது - கிட்டத்தட்ட 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகைக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது.
இந்தத் தொகை கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அமைப்புக்களால் தங்களுடைய தேவைகளுக்காக , நிர்வாக தேவைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் செலவிடப் பட்டதாக அவர்களால் கூறப்பட்டது.
அது மட்டுமல்லாமல் கல்வி அபிவிருத்தி நிதியம் என்கிற ஒரு நிதியத்திற்கு மாணவர்களுடைய குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக செலவிடப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் பல்வேறுபட்ட குளறுபடிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஈவு வழங்குவதிலும் பாரபட்சங்கள் சில இடங்களில் இடம்பெற்று வருகின்றன.
இதற்கு வருகின்ற வருடம் மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் ஏனைய சம்பந்தமான திணைக்களங்கள் முழுமையாக ஒன்றுகூடி, ஒரு பொருத்தமான, ஏழை விவசாயிகளை பாதிக்காத வகையில் ஒரு காத்திரமான திட்ட வரைவு ஒன்றை மேற்கொள்ள குறித்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவை மாற்றி அமைக்க குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதை மாற்றியமைப்பது தொடர்பாகவும் விவசாய அமைச்சருடன் கலந்துரையாடி முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு குழுவாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட குழு கடந்த ஐந்து வருடங்களாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த விடயங்களை எதிர்வரும் வருடங்களிலே முழுமையாக சீர் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இங்கு கையாளப்பட்ட நிதிகளுக்கான சரியான கணக்கறிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிப்பதற்கு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம் மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட கூட்டம் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள், திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டார்கள். கடந்த பல வருடங்களாக இந்த ஈவு வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருக்கிறது. அந்த வகையில் அவற்றை தீர்ப்பதற்கான காத்திரமான ஒரு கூட்டம் இடம்பெற்றது. இந்த வருடம் 32 ஏக்கர் விவசாய பூமி ஏலம் விடப்பட்டிருக்கிறது - கிட்டத்தட்ட 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகைக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அமைப்புக்களால் தங்களுடைய தேவைகளுக்காக , நிர்வாக தேவைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் செலவிடப் பட்டதாக அவர்களால் கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் கல்வி அபிவிருத்தி நிதியம் என்கிற ஒரு நிதியத்திற்கு மாணவர்களுடைய குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக செலவிடப்பட்ட தாகக் கூறப்படுகிறது.இருப்பினும் பல்வேறுபட்ட குளறுபடிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஈவு வழங்குவதிலும் பாரபட்சங்கள் சில இடங்களில் இடம்பெற்று வருகின்றன. இதற்கு வருகின்ற வருடம் மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் ஏனைய சம்பந்தமான திணைக்களங்கள் முழுமையாக ஒன்றுகூடி, ஒரு பொருத்தமான, ஏழை விவசாயிகளை பாதிக்காத வகையில் ஒரு காத்திரமான திட்ட வரைவு ஒன்றை மேற்கொள்ள குறித்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவை மாற்றி அமைக்க குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதை மாற்றியமைப்பது தொடர்பாகவும் விவசாய அமைச்சருடன் கலந்துரையாடி முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குழுவாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட குழு கடந்த ஐந்து வருடங்களாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.இந்த விடயங்களை எதிர்வரும் வருடங்களிலே முழுமையாக சீர் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இங்கு கையாளப்பட்ட நிதிகளுக்கான சரியான கணக்கறிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிப்பதற்கு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.